38 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார்கள்: நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த டோனி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

அமரபலி நிறுவனம் தனக்கு ஒப்பந்தம் செய்த ரூ38.95 கோடி ரூபாய் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறது என வீரர் டோனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி அமரபலி என்ற நிறுவனத்திடம் அந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் படி அந்நிறுவனம் கட்டுமானம் செய்யும் கட்டிடங்களுக்கு மார்கெட்டிங் மற்றும் பொது தொடர்பு ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காவும் ஒப்பந்தம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அந்த நிறுவனம் மீது டோனி வழக்கு தொடர்ந்துள்ளார். அமரபலி நிறுவனம் தனக்கு செய்த ஒப்பந்தப்படி ரூ38.95 கோடி தர வேண்டும். அந்த தொகைக்கு ஈடாக அந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள நிலத்தை நீதிமன்றம் ஜப்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்