மொக்கை வாங்கிய டோனியின் மனைவி... அசத்தல் பதில் கொடுத்த ஜடேஜா: சுவாரஸ்ய வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா கேட்ட மொக்கையான கேள்விக்கு டோனியின் மனைவி தவறாக பதில் கொடுக்கும் வீடியோ காட்சியை சென்னை அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை அணியானது மற்ற அணிகளை விட எப்பொழுதும் ஒரு குடும்பமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியின் போதும் வீரர்கள் தங்களுடைய குடும்பங்களை அழைத்து வந்து அவர்களுடன் செல்லமாக விளையாடுகின்றனர்.

அவர்கள் அடிக்கும் லூட்டிகளை சென்னை அணி தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடும்.

அதுபோன்று இந்த ஆண்டும் எடுக்கப்படும் வீடியோக்களையும் சென்னை அணி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு சென்னை அணி விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்துள்ளது.

அப்போது கையில் ஒரு சிறிய காமிராவுடன் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா டோனியின் மனைவி சாக்ஷியிடம், நூறில் எத்தனை முறை பத்தை கழிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சாக்‌ஷி 10 முறை என்று கூற, மோகித் தவறான விடை என்றார்.

மீண்டும் சாக்‌ஷி முயற்சி செய்து 100 முறை என்றார், அதையும் தவறு என்று கூறிய மோகித், 1முறை., ஏனென்றால் நூறில் 10 சென்று விட்டால் மீதி 90 தானே இருக்கும். அப்ப எப்படி நூறில் பத்தை கழிக்க முடியும் எனக்கூறிவிட்டு சிரிக்கிறார்.

இதேபோல ஜடேஜாவிடம் உங்கள் வீட்டு கோழி பக்கத்து வீட்டில் சென்று முட்டை போட்டால் அது யாருக்கு சொந்தம் என கேட்கிறார். அதற்கு ஜடேஜா கோழிக்கு சொந்தம் என கூறி அசத்துகிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்