இளம்பெண்ணுடன் டிக்டாக் வீடியோ செய்து சர்ச்சையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா, இளம் பெண் ஒருவருடன் இந்தி பாடலுக்கு டிக் டாக் செய்த நிலையில் அவருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா துபாயில் இளம் பெண் ஒருவருடன் டிக் டாக் செயலியில் இந்தி பாடல் ஒன்றுக்கு வாயசைக்கும் வீடியோ வைரலானது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் யாசிரை கடுமையாக விமர்சித்தனர்.

இது தொடர்பாக யாசிருக்கு கண்டனம் தெரிவித்துள்ளா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளது.

இந்நிலையில் டிக்டாக் விவகாரம் தொடர்பாக யாசிர் சார்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், துபாயில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டிக் டாக் செயலியை சேர்ந்த ஊழியர்கள், பாடலுக்கு வாயசைக்கும்படி ஷாவிடம் கேட்டுக்கொண்டனர்.

முதலில் மறுப்புத் தெரிவித்த அவர் பின்னர் வற்புறுத்தலால் அதற்கு சம்மதம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்