நீதா அம்பானி அதிகம் மதிக்கும் கேப்டன் டோனிதானாம்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீதா அம்பானி, தான் அதிகம் மதிக்கும் கேப்டன் டோனி என தெரிவித்துள்ளார்.

வான்கடே மைதானத்தில் நேற்றைய தினம் நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.

ஹர்த்திக் பாண்ட்யாவின் அதிரடியான துடுப்பாட்டமும், மலிங்காவின் அபாரமான பந்துவீச்சும் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மேலும், தொடர் வெற்றிகள் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல்-யில் முதல் தோல்வியை அடைந்தது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர் நீதா அம்பானி இந்த வெற்றியை கொண்டாடினார். மேலும் நேற்றைய போட்டி குறித்து அவர் கூறுகையில்,

‘ஒன்று முதல் 12 ஆண்டுகள் இந்தப் பயணத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளேன். நான் அதிகம் மதிக்கும் கேப்டன் எம்.எஸ்.டோனி. ஆகவே அவருக்கு எதிராக நாங்கள் ஆடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஆம், நாங்கள் தோற்றாலும் வென்றாலும் டோனிக்கு எதிராக ஆடுவது சிறப்பு தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்