சென்னை அணியை மோசமாக விமர்சித்த விவகாரம்: இதில் என்ன தவறு இருக்கிறது: நடிகை கஸ்தூரி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை 'என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க' என்று நடிகை கஸ்தூரி பதிவு செய்திருந்தார்.

டுவிட்டரில் கருத்து தெரிவித்தாலும் ஒரு நாகரீகம் இல்லாமல், இப்படியா எல்லை மீறி கருத்து பதிவிடுவது என கஸ்தூரிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கஸ்தூரி, “எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?

இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

இருப்பினும், இதில் யார் மனமும் புண்பட்டிருந்தால், மனமார வருந்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...