தாய் தந்தையை இழந்து நின்ற சிறுவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..லண்டனுக்கு செல்கின்றனர்! எதற்காக தெரியுமா

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தெரு கிரிக்கெட் உலககிண்ணப் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து நான்கு சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தற்போது கிரிக்கெட் உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்துள்ளதால், பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.

தெருக்களில் சிறுவர்கள் தங்கள் வசதிக்கேற்றதுபோல விதிகளை மாற்றி அமைத்துக்கொண்டு விளையாடுவது தான் தெருக் கிரிக்கெட். அந்த வகையில் லண்டனில் நடத்தப்படும் தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு சென்னையில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் வடசென்னையில் உள்ள கருணாலயா பொது சேவை மையத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடன் மும்பையை சேர்ந்து 4 சிறுவர்கள் சேர்ந்து 8 பேர் கொண்ட ஒரே அணியாக லண்டன் செல்லவுள்ளனர்.

இந்த தெருக் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ், நேபால் உள்ளிட்ட 9 நாடுகளை சேர்ந்த 10 அணிகள் விளையாடவுள்ளன.

இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியா என இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இந்த நான்கு சிறுவர்கள் தாய் அல்லது தந்தைய அல்லது இரண்டு பேரையும் இழந்து ஆதரவற்ற நிலையில், ஏழ்மையுடன் கருணாலயா மையத்தில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers