தூக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த கிரிக்கெட் வீரர்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

தூக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயது அலெக்ஸ் ஹெப்பர்ன் என்ற இளைஞர் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார்.

அங்கு வொர்சஸ்டர்ஷைர் கவுன்டி அணிக்காக கிரிக்கெட் விளையாடி வந்த இவர், சிட்டி சென்டர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி இரவு நண்பர்களுடன் வெளியில் சென்று வந்த இவர், அண்டை குடியிருப்பில் தூக்கத்தில் இருந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் யார் என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான வழக்கு, மத்திய இங்கிலாந்தில் உள்ள வொர்சஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிவில், அவர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அவருக்கான தண்டனை வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers