கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது! இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கொழும்பில் குண்டுவெடிப்பு நடந்துள்ள நிலையில் அது அதிர்ச்சியளிப்பதாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கொழும்பில் உள்ள கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நட்சத்திர ஹொட்டல்கள் உட்பட ஆறு இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

உபுல் தரங்கா தனது பதிவில், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு எனது பிரார்த்தனைகள்.

இதுபோன்ற சமயத்தில் இலங்கையர்கள் ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

கவுஷல் சில்வா தனது பதிவில், இந்த செய்தியை கேட்க அதிர்ச்சியாக உள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனைகள் என பதிவிட்டுள்ளார்.

பர்வீஸ் மகரூப் தனது பதிவில், இலங்கைக்கு இன்று சோகமான நாள், இந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. எல்லோரும் வீட்டின் உள்ளே பத்திரமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதே போல சமீந்தா வாஸ், அர்னால்டு போன்ற வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்