மருத்துவமனையில் மனைவி: இங்கிலாந்து திரும்பிய ஜோஸ் பட்லர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் தன்னுடைய மனைவிக்கு முதல் குழந்தை பிறக்கவிருப்பதை ஒட்டி இங்கிலாந்து சென்றுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி வந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், இதுவரை 8 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 315 ரன்களை குவித்திருந்தார்.

மும்பை அணிக்கெதிரான நேற்று நடைபெற்ற போட்டியில் அதிரடி மாற்றமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் பொறுப்பேற்று அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

அதேசமயம் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஜோஸ் பட்லர் திடீரென அணியிலிருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

பாகிஸ்தான் அணிகெதிரான போட்டியில் விளையாடவிருப்பதை ஒட்டி இம்மாத இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் நாடு திரும்புவார்கள் என கூறப்பட்ட நிலையில், நேற்றுடன் பட்லர் நாடு திரும்பியுள்ளார்.

அவருடைய மனைவி முதல் குழந்தைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்