குண்டுவெடிப்பு சம்பவம்: அதிர்ஷ்டவசமாக பிழைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்... மயிரிழையில் உயிர் தப்பிய இன்னொரு வீரரின் தாய்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிர் தப்பியதுடன், இன்னொரு இலங்கை வீரரின் அம்மாவும் உயிர் பிழைத்துள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 140-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் தஷுன் ஷனகாவின் தாய் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

அதே போல வளர்ந்து வரும் இலங்கை வீரரான ஹசிதா பொயகோடா, ஷங்ரி லா ஹொட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்