எனது இதயம் நொறுங்கிவிட்டது... இலங்கை குண்டுவெடிப்பு குறித்து சங்ககாரா-ஜெயவர்த்தனேவின் உருக்கமான பதிவு!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தனது இதயத்தை நொறுக்கியுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககாராவும், இலங்கைக்கு இது மிகவும் சோகமான நாள் என்று மகிளா ஜெயவர்த்தனேவும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிரபலங்களும், பல நாடுகளின் தலைவர்களும் இந்த சம்வங்களுக்கு கண்டனங்களையும், வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்த்தனே ஆகியோர் குண்டுவெடிப்பு குறித்து ட்வீட் செய்துள்ளனர்.

சங்ககாரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இந்த இழிவான காட்டுமிராண்டி செயல்களினால் நான் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக எனது இதயம் நொறுங்கிவிட்டது.

நீங்கள் அனைவரும் என் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளிலும் உள்ளனர். என் அன்பினை நான் நீட்டிக்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். அதேபோல் ஜெயவர்த்தனே கூறுகையில்,

‘இலங்கையில் இருக்கும் நம் அனைவருக்கும் இது மிகவும் சோகமான நாள். 10 ஆண்டுகால அமைதிக்கு பிறகு மீண்டும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களை காண்கிறோம். கண்டனங்கள் மற்றும் பிரார்த்தனைகளை இழந்தவர்களுக்காக செய்யும் இந்த நேரத்தில், நாம் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்