குண்டு வெடிப்பு சம்பவத்தால் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு பதக்கத்தை சமர்பித்த வீராங்கனை... குவியும் பாராட்டு

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

ஆசிய சாம்பியன் போட்டியில் வென்ற வெண்கல பதக்கத்தை தன் நாட்டு மக்களுக்காக இலங்கையைச் சேர்ந்த வீரராங்கனை விதுஷா லக்சானி சமர்பித்துள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 321 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதில் 48 பேர் வெளிநாட்டினர்.

தீவிரவாதிகள் நடத்திய இந்த கொலை வெறி தாக்குதலால் இலங்கை மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதற்கிடையில் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பான புகைப்படங்களை ஐ.எஸ். அமைப்பு நேற்று வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த விதுஷா லக்சானி கத்தாரின் டோகா பகுதியில் நடைபெற்று வரும் AsianAthleticsChampionship2019 போட்டியின் Triple Jump-ல் கலந்து கொண்டார்.

இதில் அவர் வெண்கலப் பதக்கம் வென்ற அவர் இந்த பதக்கத்தை குண்டு வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேகோம்போ மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்