குண்டு வெடித்த தேவாலயத்தில் நானும் இருந்திருப்பேன்! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இலங்கை வீரர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
501Shares

உடல் சோர்வு காரணமாக செபாஸ்டியன் தேவாலயத்திற்கு செல்லாததால் தான் குண்டுவெடிப்பில் இருந்து தப்பியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனாகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் அன்று புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டு வெடித்தது. இந்த தேவாலயம் அருகில் தான் இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் ஷனாகாவின் வீடு உள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செல்லும் ஷனாகா, ஈஸ்டர் அன்று தேவாலயத்திற்கு செல்லாததால் குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வழக்கமாக நான் சர்ச்சுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், நான் முந்தைய நாள் வெளியில் சென்றிருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தேன். அதனால் செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் நான் வீட்டில் இருந்தபோது, வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரம் கழித்து மக்கள் தேவாலயத்தில் குண்டு வெடித்ததாக கூறினார்கள்.

நான் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். அப்போது கண்ணால் கண்ட சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. தேவாலயம் முழுவதும் சிதைந்து காணப்பட்டது. உயிரிழந்தவர்களை மக்கள் வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள். அந்த சம்பவத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், தேவாலயத்திற்குள் இருந்தவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Sri Lankan Cricket Board

ஏனென்றால், குண்டு வெடிப்பு விபத்தால் சிதறிய சிறு துகளால் அருகில் உள்ளவர்கள் கூட காயம் அடைந்துள்ளனர். எனது அம்மாவும், பாட்டியும் தேவாலயம் சென்றிருந்தார்கள். ஆனால் இருவரும் உயிர் பிழைத்துவிட்டனர்.

ஆனால், எனது பாட்டியின் தலையில் கல் ஒன்று பலமாக தாக்கியதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் இனவாத பிரச்சனை ஏதும் கிடையாது. ஆனால் இந்த சம்பவம் பாதுகாப்பு குறித்து யோசிக்க வைத்துள்ளது. தெருக்களில் நடக்கவே பயமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்