தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பா.ஜ.க வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் பா.ஜ.க கட்சியில் இணைந்தார். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

நேற்றைய தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த காம்பீர், மனுவுடன் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.

அதில் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 2017-18ஆம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காம்பீரின் மனைவிக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சிறப்பை கவுதம் காம்பீர் பெற்றுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்