இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி திடீர் கைது!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் மனைவியை பொலிசார் இன்று திடீரென கைது செய்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடி வருகிறார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் ஷமி இடம் பிடித்துள்ளார்.

ஷமியின் மனைவி ஹசின் ஜாஹா, தனது கணவர் மீது சூதாட்ட புகார், வரதட்சணை கொடுமை, வேறு பெண்களுடன் தொடர்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக இருவரும் தனித்தனியாக புகார் அளித்த நிலையில், தற்போது இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

முகமது ஷமி உத்தர பிரதேச மாநிலம் ஷஹாஸ் அலி நகரில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சமயம் ஷமியின் வீட்டிற்கு, அவரது ஹசின் ஜஹா தனது மகளை அழைத்துக்கொண்டு சென்றார்.

அங்கு ஷமியின் தாயுடனும், சகோதரருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹசின், அத்துமீறி வீட்டிற்குள் நுழையவும் முயன்றதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஷமியின் தாய் மற்றும் அவரது சகோதரர் பொலிசில் ஹசின் மீது புகார் அளித்தனர்.

இந்நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் ஐ.பி.சி.151 பிரிவின் கீழ் ஷமியின் மனைவி ஹசினை பொலிசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்