அடுத்தடுத்து தோல்வி.. புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்! கதறும் கோஹ்லி ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

2019 ஐ.பி.எல் தொடரில் பிளே-ஆப் செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துள்ளது கோஹ்லி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐ.பி.எல் தொடர்களில் கடந்த இரண்டு சீசன்களாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்லாத நிலையில், தற்போது மீண்டும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது.

அத்துடன் ஐ.பி.எல் தொடர்களில் 100 போட்டிகளில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனையையும் செய்துள்ளது. இந்த நூறு போட்டிகளில் 90 போட்டிகளில் கோஹ்லி பங்கேற்றுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் கோஹ்லி முதலிடத்தில் இருந்தாலும், அவரது கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு வீரர்களை மாற்றிப் பார்த்தும் பெங்களூரு அணியால் சோபிக்க முடியவில்லை.

மற்றொரு சோகம் என்னவென்றால், கடந்த 6 ஆண்டுகளாக பிளே-ஆப் செல்ல முடியாமல் தவித்த டெல்லி அணி கூட இந்த சீசனில் சென்றுவிட்டது. எனவே, கோஹ்லி ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். மேலும் பெங்களூரு அணியை விட்டு கோஹ்லி விலகி விடலாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்