முடி திருத்தும் சிறுமிகளின் கல்விக்காக சச்சின் டெண்டுல்கர் செய்த விடயம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், முடி திருத்தும் வேலை செய்யும் சிறுமிகளின் கடையில் Shaving செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகள் நேகா மற்றும் ஜோதி. முடி திருத்தும் கடையை நடத்தி வந்த இவர்களது தந்தை, கடந்த 2014ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் நேகாவும், ஜோதியும் இணைந்து முடி திருத்தும் கடையை நடத்தி, தங்களது தந்தையின் மருத்துவ செலவை கவனித்து வருகின்றனர். அத்துடன் இவர்கள் படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரு சிறுமிகளின் கல்வி உதவிக்காக, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு Shaving செய்யும் வாய்ப்பை பிரபல Gillette India நிறுவனம் ஏற்பாடு செய்தது.

அதன்படி சச்சின் டெண்டுல்கர் சிறுமிகளின் முடி திருத்தும் கடையில் Shaving செய்துகொண்டார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இது எனக்கு முதல்முறை. நீங்கள் இதனை அறிந்திருக்காமல் இருக்கலாம். நான் இதுவரை பிறரிடம் Shaving செய்து கொண்டது இல்லை. அந்த சாதனை தற்போது உடைந்துள்ளது. இந்தப் பெண்களை சந்தித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்