மோசமான நிலையில் பெங்களூரு அணி: அதிரடி நடவடிக்கைக்கு தயாரான பயிற்சியாளர்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களிலும் சரிவர விளையாடாத பெங்களூரு அணியில், அடுத்த வருடம் அதிரடி மாற்றம் செய்ய வேண்டி இருப்பதாக அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விராட்கோஹ்லி தலைமையில் விளையாடி வரும் பெங்களுரு அணி, முதல் 6 போட்டியில் தோல்வியை சந்தித்ததன் எதிரொலியாக, லீக் போட்டியில் இருந்து வெளியேறிய முதல் அணி என்கிற மோசமான பெயரை பெற்றுள்ளது.

பெங்களூரு அணி தன்னுடைய இறுதி போட்டியில் ஐதராபாத் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. இந்த மோசமான நிலைக்கு அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தன்னுடைய போதிய அனுபவத்தை அணிக்கு வழங்கவில்லை என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது.

2020 வரை அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் தொடர்வாரா என்கிற சந்தேகமும் தற்போது நிலவி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், இது ஒரு ஏமாற்றமான தொடராக எங்களுக்கு அமைந்துவிட்டது. ஐபிஎல் தொடரில் முதல் 7 போட்டிகளில் எங்களால் 2 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. இரண்டாவது பாதியில் தான் எங்களால் சில விடயங்களை பெற முடிந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் அணியில் அதிரடி மாற்றம் செய்ய வேண்டியதற்கான நேரம் நெருங்கிவிட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்