சென்னை அணி பயிற்சியாளரை முகம் சுளிக்க வைத்தை மஞ்ச்ரேக்கரின் கேள்வி! கொந்தளித்த ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை, வர்ணனையாளர் மஞ்ச்ரேக்கர் முகம் சுளிக்கும்படி பேசியதை நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே-ஆப் போட்டி நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கிடையில் மும்பை அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் பேட்டியெடுத்தார்.

அப்போது ‘இந்தப் போட்டியில் எல்லா முடிவுகளையும் டோனி தான் எடுக்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால், இவர்தான் எடுத்திருக்கிறார்’ என்று பிளெம்மிங்கை நோக்கிக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சை கேட்ட பிளெம்மிங் சற்று முகம் சுளித்தபடி திரும்பினார். அதன் பின்னரும் பிளெம்மிங்கிற்கு அசவுகரியம் அளிக்கும்படியான கேள்விகளை மஞ்ச்ரேக்கர் கேட்டார்.

இந்நிலையில், மஞ்ச்ரேக்கரின் பேச்சை பலரும் விமர்சித்தனர். மேலும் ரசிகர்கள் பலர், வர்ணனையாளராக இருந்துகொண்டு மும்பை அணிக்கு ஆதரவாக எப்படிப் பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்