ஆடுகளம் குறித்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை: டோனி கருத்து

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சொந்த மைதானத்தில் ஆடுகளத்தை இன்னும் சிறப்பாக மதிப்பிட்டிருக்க வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த குவாலிபையர்-1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியுற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 7 லீக் ஆட்டங்களில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அணிகள் பீல்டிங்கையே தெரிவு செய்தன. ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணித்தலைவர் டோனி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 131 ஓட்டங்களே சென்னை அணி எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

AP

இந்நிலையில் ஆடுகளம் குறித்து டோனி கூறுகையில், ‘சேப்பாக்கம் எங்களது சொந்த மைதானம். ஆடுகளம் தன்மையை உடனடியாக மதிப்பிட்டிருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே இங்கே 7 போட்டிகளில் விளையாடியுள்ளோம்.

இது சொந்த மைதான அணிக்கு கூடுதல் பலம். ஆடுகளம் எப்படி செயலாற்றும் என்பதை நாங்கள் அறிந்திருக்க வேண்டும். Slow Track ஆக இருக்குமா?, பந்து பேட்டிற்கு நன்றாக வருமா? வராதா? போன்ற விடயங்களை நாங்கள் சிறப்பாக செய்யவில்லை. துடுப்பாட்டத்தில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்