டோனி அவுட்டே இல்ல..அம்பயர் செத்துடுவான்! கதறி அழும் சிறுவனின் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
274Shares

மும்பை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டோனி ரன்-அவுட் ஆனதால், சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நடந்த 12வது ஐ.பி.எல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது.

சென்னை அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, அந்த அணியின் தலைவர் டோனி ரன்-அவுட் ஆனார். மூன்றாவது நடுவர் டோனி அவுட் தான் என்று கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டோனி ரன்-அவுட் ஆன வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டோனியின் அவுட் குறித்து சிறுவன் ஒருவன் அழுதுகொண்டே பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவன், டோனி அவுட் இல்லை என்றும், மூன்றாவது நடுவர் தூக்கு மாட்டி இறந்துவிடுவார் என்றும் கூற அவனது தாய் சிறுவனை சமாதானப்படுத்துகிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்