வெளிநாட்டில் மனைவியுடன் சுற்றுலா சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்: வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், நடுவருமான குமார் தர்மசேனா தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 141 ஒருநாள் போட்டிகளிலும், 31 டெஸ்ட் போட்டிகளிலும், 7 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளவர் குமார் தர்மசேனா.

இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பலவற்றில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தர்மசேனா தனது மனைவி துஷ்யந்தியுடன் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள ஹொட்டல்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் மனைவி துஷ்யந்தியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் தர்மசேனா வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers