நாங்கள் அவரை தீவிரவாதி என்று அழைப்போம்! டோனியின் நண்பர் தெரிவித்த சுவாரஸ்ய தகவல்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

டோனியின் நண்பர் சத்ய பிரகாஷ் என்பவர், அவரை நாங்கள் தீவிரவாதி என்று தான் அழைப்போம் என டோனி குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இந்தத் தொடரில் அனுபவ வீரர் டோனியின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் உலகக்கோப்பை குறித்தும், அதில் விளையாடும் வீரர்கள் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், டோனியின் பீகார் அணி நண்பரான சத்ய பிரகாஷ் என்பவர், டோனியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

டோனி குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் டோனியை தீவிரவாதி என அப்போது அழைப்போம். அவர் களத்துக்குச் சென்றால் 20 பந்துகளில் 40-50 ஓட்டங்கள் அடித்துவிட்டு வந்துவிடுவார். ஆனால், நாட்டுக்காக ஆடும்போது அவர் துறவியைப் போன்று ஆகிவிட்டார்.

அவர் தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டார். அப்போதெல்லாம் டோனி பெரிதாக கேப்டன்ஷிப் செய்தது கிடையாது. ஆனால், இப்போது பாருங்கள்.. உலகின் சிறந்த வீரர்களுக்கு அவர் கேப்டனாக இருந்திருக்கிறார்.

அவர் தொடர்ந்து கற்றுக்கொண்டு இருக்க விரும்புவார். நாங்கள் ஒன்றாக விளையாடிய காலத்தில் அவர் இந்தியில் மட்டுமே பேசுவார். ஆங்கிலத்தில் பேசமாட்டார். ஆனால், இப்போது பாருங்கள். சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்