இரவு முழுவதும் மகளுடன் மருத்துவமனையில்... போட்டியில் சதமடித்த இங்கிலாந்து வீரர் உருக்கம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
643Shares

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் தன்னுடைய மகளை மருத்துவமனையில் அனுமதிவிட்டு அணிக்காக சதமடித்து அசத்தியிருப்பதை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் 4 போட்டிகளில் இங்கிலாந்து அணி 3-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நான்காவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 340 ரன்களை இலக்காக குவிந்திருந்தது.

ஆனால் அசத்தலாக விளையாடிய இங்கிலாந்து அணி வீரர்கள் 341 ரன்களை கடந்து வெற்றி வாகை சூடியிருந்தனர். இந்த போட்டியில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 114 ரன்களை குவித்திருந்தார். அவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

அந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய ஜேசன் ராய், இது மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணம். இப்படி நிகழும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

எனக்கு இன்றைய காலை நேரம் துரதிர்ஷ்டமானதாக இருந்தது. அதிகாலை 1.30 மணிக்கு என்னுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

அங்கு சிகிச்சை முடிந்து காலை 8.30 மணி வரை மகளுடன் இருந்தேன். அதன் பிறகு சில மணி நேரங்கள் மட்டுமே உறங்கிவிட்டு மைதானத்திற்கு சென்றுவிட்டேன். அதனால் இந்த சதம் எனக்கும் என்னுடைய குடும்பத்தாரும் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக்கூறினார்.

இந்த பிரச்னை தீவிரமாக இல்லை என்றாலும் கூட, கடினமான சூழ்நிலைகளில் அவர் விளையாடிய விதம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது என இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்