நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்! வெளிப்படையாக கூறிய இந்திய வீராங்கனை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துத்தி சந்த்(23), கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு 2 வெள்ளிப்பதக்கங்களை வென்று சாதித்தவர். 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலின பரிசோதனை மூலம், துத்தி சந்துக்கு ஆண்மைத்தன்மை இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மன்றத்தை அணுகிய துத்தி, தனக்கான நியாயத்தைக் கேட்டுள்ளார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சி பெற்று வரும் துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘நான் எனக்கான துணையை தேடிக்கொண்டே. எனது ஊரிலேயே சில வருடங்களுக்கு முன் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். நம் துணையை தேடிக்கொள்வதில் அனைவருக்கும் முழு சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறேன். நான் என்றுமே தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகிறேன்.

Getty Images

அது ஒரு தனிமனித சுதந்திரம், தேர்வு. எதிர்காலத்தில் நான் அந்தப்பெண்ணுடன் வாழ விரும்புகிறேன். தற்போது என் கவனம் முழுவதும் உலக சாம்பியன்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தான் உள்ளது.

எனது முடிவைக் கொண்டு என்னையோ அல்லது என் விளையாட்டையோ யாரும் முடிவு செய்ய முடியாது என நம்புகிறேன். இது என் தனிப்பட்ட முடிவு. நான் கடந்த 10 வருடங்களாக ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

இன்னும் 5 அல்லது 7 வருடங்களுக்கு விளையாட்டுத்துறையில் இருப்பேன். என்னை ஊக்கப்படுத்தவும், என்னுடன் பயணிக்கவும் எனக்கு ஒருவர் தேவை’ என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தன்பாலினத்தில் துணையை தேர்வு செய்துள்ள முதல் விளையாட்டு வீராங்கனை துத்தி சந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers