உலகக்கோப்பையை வெல்ல இந்த அணிக்குதான் வாய்ப்பு: கவுதம் காம்பீர் கணிப்பு

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் நடக்கும் 12வது உலகக்கோப்பையை அவுஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கணித்துள்ளார்.

12வது உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், வரும் 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து என 10 அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து, முன்னாள் வீரர்கள் பலர் தங்கள் கணிப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் என்று அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையையும் அவுஸ்திரேலியாவே வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப்போட்டிக்கு நுழையும்.

உலகக்கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது. ரோஹித், கோஹ்லியின் ஆட்டத்தை பொறுத்து மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும்.

பந்துவீச்சில் பும்ரா துருப்புச் சீட்டாக இருப்பார். இந்த உலகக்கோப்பை போட்டி முறை சுவாரசியமானது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது.

உலகக்கோப்பையை வெல்ல 2வது வாய்ப்பாக இங்கிலாந்தை நான் கூறுவதற்கு சொந்த மண்ணில் விளையாடுவதால் அல்ல. அந்த அணியில் எல்லா வரிசையிலும் ஆடக்கூடிய திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது’ என தெரிவித்துள்ளர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers