நான் ஒரு பெண்ணை காதலிப்பதால் சகோதரியே என்னை மிரட்டுகிறார்! இந்திய வீராங்கனை வேதனை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தான் ஒரு பெண்ணை காதலிப்பதால் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற குடும்பத்தினர் முயற்சிப்பதாக, ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஊடகங்களில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, துத்தி சந்தின் குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன் சகோதரி தன்னை மிரட்டுவதாக துத்தி சந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘என்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், என்னுடைய சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்னை வீட்டை விட்டே வெளியேற்றுவேன் என்றும், சிறையில் தள்ளுவேன் என்றும் மிரட்டுகிறார்.

எனது சகோதரி என் குடும்பத்தில் வல்லமை படைத்தவள். எனது சகோதரனின் மனைவியை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினாள். அதேபோல் என்னையும் விரட்டுவேன் என்று மிரட்டுகிறாள். என் துணையை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு.

தற்போது என் கவனம் முழுவதும் வேர்ல்ட் சாம்பியன்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தான் உள்ளது. நான் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Shahbaz Khan/PTI

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers