நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தன்னுடைய நீண்ட நாள் காதலி பிரீத்திராஜ் எருவாவை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி இந்திய முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடந்த போட்டியின் போது அறிமுகமானார்.

அதில் அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதேபோல ஐபில் போட்டிகளிலும் சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியும், அழகுக்கலை நிபுணருமான பிரீத்திராஜ் எருவாவை நேற்று திருமணம் செய்துகொண்டார். உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என 1500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹனுமா, "உன் முகத்தில் இருக்கும் இந்த புன்னகை எப்பொழுதும் தொடரும் என உறுதியளிக்கிறேன். ஐ லவ் யு" என பதிவிட்டுள்ளார்.

மேலும் வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்