தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை மீது ஊக்க மருந்து புகார்... 4 ஆண்டுகள் தடை...?

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து மீது ஊக்க முருத்து புகார் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து (30). தமிழகத்தை சேர்ந்த இவர். சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், ஸ்டெராய்டு என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக தெரிகிறது. இவருக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கோமதியின் 'பி' மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் எனவும், மேலம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இச்செய்தியை கோமதி தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்