கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய இந்திய அணி வீரர்: ஏன் தெரியுமா?

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
743Shares

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் கையெடுத்து கும்பிட்டபடியே பேசும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உலகக்கிண்ணம் போட்டியின் 18வது லீக் போட்டியானது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்தது.

கடந்த இரண்டு நாட்களாகவே நாடிங்ஹாமில் வெளுத்து வாங்கும் மழை இன்று போட்டி துவங்குவதற்கு முன்னே பொழிய ஆரம்பித்தது.

இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரம் மழை நின்றதும் நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிறிதாக பெய்துகொண்டிருந்த மழை பெரிதாக மாறியது. இதனால் போட்டியினை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் நாடிங்ஹாம் மைதானத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் வருட பகவானிடம் கையெடுத்து கும்பிடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பேசியிருக்கும் கேதர், நாடிங்ஹாமில் விளையாட்டிற்கு இடையூறு செய்வதற்கு பதிலாக இந்தியாவில் வறட்சி நிலவும் தன்னுடைய சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

அங்குள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவை என்றும், நாடிங்ஹாமில் கொட்டித்தீர்ப்பதற்கு பதிலாக அங்கு பெய்தால் வெறும் 7 சதவீதம் மட்டுமே பயன்பாட்டுக்கு உள்ள தண்ணீர் அளவு உயரும் என்று பேசியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்