மைதானத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி! விராட் கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தங்களுக்கு ஆதரவு ரசிகர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி நன்றி தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் நகரில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இதன்மூலம் இந்திய அணியை உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்ற வரலாறு தொடர்கிறது. நேற்றைய போட்டியில் ஏராளமான ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. மைதானத்துக்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று நடந்த ஆட்டத்தில் நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பே கோஹ்லி வெளியேறினார். பின்னர் தொலைக்காட்சி ரீப்ளேயில் பந்து மட்டையில் படாமல் இருந்தது தெளிவாக தெரிய வந்தது.

இதனைக் கண்டு கோஹ்லி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். கோஹ்லியின் செயலைக் கண்டு, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ரசிகர்கள் சில சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers