நான் எப்படி இருக்கிறேன்னு கேட்கக்கூடாதா தமிழ் மக்களே! ஹர்பஜன் சிங்கின் ட்வீட்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தமிழில் ட்வீட் பதிவிடும்போது பேசும் நீங்கள், மற்ற நேரங்களில் ஏன் ஒரு ஹாய் கூட கூற மாட்டக்கிறீங்க என ஹர்பஜன் சிங் தமிழ் ரசிகர்களிடம் விளையாட்டாக கேட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.

சென்னை அணி ரசிகர்களை கவர்வதற்காக ஐ.பி.எல் தொடரின்போது, தமிழில் அடிக்கடி ட்வீட் செய்து அதிக அளவில் Likes-ஐ பெற்று வந்தார் ஹர்பஜன். ஆனால், ஐ.பி.எல் தொடர் முடிந்த பின்னர் அவருக்கும், ரசிகர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமானது.

PTI

இந்நிலையில், தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்து விட்டதாக ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘எல்லாருக்கும் வணக்கம்!! என்னோட தமிழ் சொந்தங்கள் எல்லாம் எப்படி இருக்கீங்க, ஏன் நீங்க எல்லாம் நான் Tamil Tweet போடும் போது ஆசையா பேசுறீங்க. மற்ற நேரங்களில் ஒரு ஹாய், ஹலோ கூட இல்ல. நான் எப்படி இருக்கேன்னு கேட்கக்கூடாதா? சும்மா விளையாடினேன். எல்லாம் நல்லா இருக்கீங்களா. தமிழ் மக்களால் நான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்