தோல்வியால் மைதானத்தில் கண்ணீர்விட்ட பிராத்வெயிட்: சமாதானப்படுத்திய எதிரணி வீரர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்த பின்னர் மைதானத்தில் கண்ணீர் விட்ட பிராத்வெயிட்டை எதிரணி வீரர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.

உலகக்கிண்ணம் போட்டியின் 29வது லீக் போட்டியானது நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்றது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை குவிந்திருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், கிறிஸ் கெய்ல் (87), ஷிம்ரான் ஹெட்மியர் (54) மற்றும் கார்லோஸ் பிராத்வைட் (101) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலே அவுட்டாகி வெளியேறினார்.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 49 ஓவர்களில் 286 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

போட்டி முடிந்த பின்னர் களத்தில் இறுதிவரை போராடிய கார்லோஸ் பிராத்வைட, மைதானத்திலே கண்ணீர் விட ஆரம்பித்தார். உடனே அங்கு வந்த நியூசிலாந்து வீரர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்