சிக்ஸ் பேக் இல்லை.. ஆனாலும் மலிங்கா இப்படிபட்டவர் தான்: மஹேல ஜெயவர்தன பதிலடி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை நட்சத்திர வீரர் மலிங்காவின் உடல் பற்றி கிண்டல் செய்தவர்களுக்கு இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்தன பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மலிங்கா உடல் எடை கூடி பெரிய வயிறுடன் இருப்பது போல சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. பலர் இது தொடர்பாக மலிங்காவை கிண்டல் செய்தனர். இறுதியில் குறித்த புகைப்படம் போலி என தெரியவந்தது.

இந்நிலையில் மலிங்காவை கிண்டல் செய்தவர்களுக்கு ஜெயவர்தன பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சிக்ஸ் பேக் இல்லை, ஆனாலும் மலிங்கா இன்னும் ஒரு பெரிய விளையாட்டு வேட்டைக்காரர் தான்.

இது சிக்ஸ் பேக்கைப் பற்றியது அல்ல, இது திறமை பற்றியது, இலங்கை இங்கிலாந்தை வென்றதில் லசித் மலிங்கா அதை காட்டினார். பெரிய வீரர்கள் பெரிய விளையாட்டுகளில் நிகழ்த்துகிறார்கள். அதையே மலிங்காவும் செய்துள்ளார். இங்கிலாந்தின் வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் ரூட்டையும், ஜோஸ் பட்லரையும் வெளியேறினார் மலிங்கா.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி மகத்தான வெற்றி, இதன் மூலம் இலங்கையின் அரையிறுதி கதவு திறந்துள்ளது என மஹேல ஜெயவர்தன

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்