பிரபல நடிகரின் மகளை காதலிக்கும் இந்திய வீரர் கேஎல் ராகுல்?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல், பிரபல ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் விளையாடி வருகிறார். இவர் நடிகை நிதி அகர்வாலை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என்று நிதி அகர்வால் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், பிரபல ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியும், கே.எல்.ராகுல் காதலித்து வருவதாக தற்போது பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவான நண்பர் மூலம் ராகுலும், அதியாவும் சந்தித்ததாகவும், நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் பின்னர் காதலாக மாறி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருவரும் காதலித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், ராகுல் மற்றும் அதியாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை, அவர்களின் தோழி ஆகன்ஷா ரஞ்சன் கபூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்