கோஹ்லியின் ட்வீட்டுக்கு கிண்டலாக பதிலளித்த இங்கிலாந்து கால்பந்து அணி!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லியின் ட்விட்டர் பதிவுக்கு, மான்செஸ்டர் கால்பந்து அணி கிண்டலாக பதிலளித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நேற்று நடந்த போட்டியில் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு இந்திய அணியைக் காண வந்திருந்தனர்.

அப்போது இந்திய அணிக்கேப்டன் கோஹ்லி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அத்துடன், ‘கால்பந்தை பற்றி தெரியவில்லை. ஆனால் இன்று மான்செஸ்டர் நீலமாக மாறியுள்ளது. சிறந்த வெற்றி’ என குறிப்பிட்டிருந்தார்.

மான்செஸ்டர் அணி இங்கிலாந்தின் கிளப் கால்பந்து அணியாகும். இந்நிலையில் கோஹ்லியின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பொறாமைப்படும்படியான ஸ்மைலியை மான்செஸ்டர் கால்பந்து அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இப்பதிவுக்கு கீழே கால்பந்து ரசிகர்கள் பலர், நாங்கள் இருக்கிறோம் என்று பதிவிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்