இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்: வெளியானது புகைப்படம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. நைக் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய சீருடையை வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் எதிர்வரும் 30ம் திகதி இந்திய அணி, இங்கிலாந்து அணியை மிக முக்கியமான போட்டியில் சந்திக்கிறது, இந்தப் போட்டியில் இந்திய அணியின் சீருடை மாறுகிறது.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு மற்றும் நீல நிறம் கலந்த சீருடையில் களமிறங்குகிறது.இந்திய அணியின் அதிகாரபூர்வ சீருடை ஸ்பான்சர்களான நைக் நிறுவனம் புதிய சீருடையை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆகாய நீல சீருடையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இந்த ஆரஞ்சு-நீல சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீரர்களுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும், லேசாக இருக்கும் என்று நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்