இந்தியாவின் தோல்விக்கு இந்த ஜெர்சி தான் காரணம்! முக்கிய பிரபலத்தின் டுவிட்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு ஜெர்சியின் நிறம் தான் காரணம் என மெக்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.

பர்மிங்காமில் நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களே எடுத்ததால், இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் தோல்வியை சந்தித்தது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஆடையை அணிந்திருந்தனர். இந்த ஆடை மாற்றத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெக்பூபா முப்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள்.

ஆனால், இந்திய அணி உலகக்கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சி தான்’ என தெரிவித்துள்ளார். இவரது ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் நெட்டிசன்களிடம் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்