லண்டனில் பிறந்த மூன்றாவது இளவரசி.. மகிழ்ச்சியில் வார்னர் குடும்பம்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய அதிரடி துடுப்பாட்டகாரர் டேவிட் வார்னருக்கு மூன்றவாதாக இளவரசி பிறந்துள்ளார்.

உலகக் கோப்பையில் தொடருக்காக வார்னர் குடும்பத்துடன் இங்கிலாந்தில் உள்ள நிலையில், லண்டனில் உள்ள மருத்துவமனையில் யூன் 30ம் திகதி இரவு 10:30 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது.

வார்னர்-கண்டிஸ் தம்பதிக்கு மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு இஸ்லா ரோஸ் என பெயர் சூட்டியுள்ளனர். முன்னதாக, ஐவி மற்றும் இந்தி என இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு வார்னர் குடும்பத்துடன் லண்டனில் வசிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய வார்னருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஒரு வருடம் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வார்னர், சமீபத்தில் உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்