டோனியின் ஓய்வு...! லசித் மலிங்கா வழங்கிய சுவாரஸ்யமான தீர்ப்பு

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய நட்சத்திர வீரர் டோனி, இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என இலங்கை நட்சத்திர வீரர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

கடந்த யூன் 30ம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய விதம் குறித்து, டோனி பல விமர்சனங்களை எதிர்கொண்டார். இவ்வாறான சூழ்நிலையில், உலகக் கோப்பைக்கு பின்னர் அவர் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

டோனி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை நட்சத்திர வீரர் மலிங்கா கூறியதாவது, டோனியை வீழ்த்த யாராலும் முடியாது. அவர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும். அவர் தனது அனுபவத்தையும், இக்கட்டான சூழ்நிலையை கையாளும் திறனையும் இளம் வீரர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக டோனி தான் பெஸ்ட் பினிஷெர். எதிர்காலத்தில் யாரும் அவரை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. முன்னாள் அணித்தலைவர் டோனியால் இந்தியாவுக்கு நல்ல அனுபவம் உண்டு. அதனால்தான் அவர்கள் ஒரு வெற்றிகரமான அணி என்று நினைக்கிறேன்.

உலகக் கோப்பை போட்டியில் எந்த அணியையும் வீழ்த்துவதற்கு அவர்கள் போதுமானவர்கள் என்று நான் நினைக்கிறேன் என லசித் மலிங்கா புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers