சிறந்த வீரர்களை உருவாக்க இது தான் வழி.. திமுத்தின் பலே ஐடியா! அனுமதிக்குமா இலங்கை?

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் ஆணையம், அதிக வீரர்களை சர்வதேச தொடர்களில் விளையாட அனுமதி அளித்து உதவ வேண்டும் என இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்த இலங்கை அணித்தலைவர் திமுத் கருணரத்ன கூறியதாவது, ஐபிஎல் மற்றும் அவுஸ்திரேலியாவின் பிக் பாஷ் போன்ற சர்வதேச போட்டிகளில், இலங்கை வீரர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்துவது, அவர்களின் அனுபவத்தை விரிவுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும்.

இலங்கையில் ஒரே ஒரு உள்ளுர் தொடர் மட்டுமே நடைபெறுகிறது. வீரர்கள் திறமைகளை காட்ட ஒரே ஒரு வாய்ப்பு தான் அளிக்கப்படுகிறது. இந்த உள்ளுர் தொடர் மூலம் தான் நாம் சிறந்த வீரர்களை அடையாளம் காண்கிறோம்.

இந்த இடைவெளியை நாம் சரி செய்ய வேண்டும். இலங்கை வீரர்கள் சர்வதேச தொடர்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும். சர்வதேச தொடர்களில் விளையாடி அனுபவம் பெற, இலங்கை வீரர்களுக்கு அனுமதி அளித்திட வேண்டும். இதை தான் இலங்கை கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன் என திமுத் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers