டோனியின் 38வது பிறந்தநாள்: தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இன்று இந்திய கிரிகெட்வீரர் மகேந்திரசிங் டோனியின் 38வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.

2004ஆம் ஆண்டு நடை பெற்ற இந்திய பங்களதேஷ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விளையாடி சர்வதேஷ கிரிக்கெட்டில் கால் பதித்தார் டோனி. ஆரம்பத்திலிருந்து, பெருமளவில் ரசிகர்களை கவர்ந்த அவர், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

2007 ஆம் நடைபெற்ற உலககோப்பை தொடரில் இலங்கை பங்களாதேஷ் அணிகளிடம் தோற்று முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. இதனால் கடும் கோவம் கொண்ட ரசிகர்கள், டோனி உள்ளிட்ட பல வீரர்களின் வீடுகளில் கல்கள் வீசினர். ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையில் டோனி தலமையிலான இந்திய அணி மிகப்பெரும் வெற்றிபெற்று டோனி ரசிகர்களை தனதாக்கி கொண்டார்.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலககோப்பையில் வெற்றிபெற்றது. அதுவும் இறுதிபோட்டியில் டோனி அதிக சிக்ஸர்கள் அடித்தது காரணமாக அமைந்தது.

ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி கேப்டனாக விளையாடி கோப்பையை வென்றதால் தமிழகத்தில் மிகபெரிய ரசிகர் பட்டாளம் பெற்றுள்ளார் டோனி..

அதிலும் எங்க தல டோனி என்ற பெயரும் யாருக்கு தெரியாத ஒன்று அல்ல ”தல” என்று அன்புடன் ரசிகர்களை பெற்றுள்ள டோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்