டோனி, சச்சின் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டெண்டுல்கர்!

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

தோனியின் பிறந்த நாளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் செய்த டிவிட் மிகப்பெரி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் வரிசையாக பல போட்டிகளில் தோனி மிகவும் பொறுமையாக ஆடினார். ஆப்கானிஸ்தான் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை. இதனால் சச்சின் தோனியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சச்சினின் விமர்சனம் பெரிய சர்ச்சையானது. பலர் தோனிக்கும் சச்சினுக்கு இடையில் பெரிய பிரச்சனை நிலவுகிறது என்று கூறி இருந்தனர். ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டனர்.

இந்த நிலையில் தோனி ஓய்வு பெற போகிறார். இந்த உலகக் கோப்பை தொடர்தான் அவருக்கு கடைசி தொடர். இந்த தொடரின் இறுதியில் அவர் ஓய்வு பெறுவார் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்தது.

தொடர்ந்து, சச்சின் நேற்று தோனியின் பிறந்த நாள் அன்று செய்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அடுத்த இரண்டு போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று சச்சின் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த டிவிட்டில் புது சர்ச்சை எழுந்துள்ளது. ஏன் சச்சின், தோனியின் அடுத்த இரண்டு போட்டிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அப்படி என்றால் அது தான் தோனியின் கடைசி இரண்டு போட்டிகளா? சச்சினுக்கு தோனியின் ஓய்வு ரகசியம் தெரிந்துதான் அப்படி வாழ்த்து தெரிவித்தாரா என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த டிவிட் மீண்டும் சச்சின் தோனி ரசிகர்களுக்கு இடையில் சண்டை உருவாக்கி உள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...