இத்துப்போன டோனியே அணியில் இருக்கும் போது உனக்கென்ன? டோனியை அசிங்கப்படுத்திய பிரபலம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி குறித்து மீண்டும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் மோசமாக பேசியிருப்பது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அடிக்கடி டோனி குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு யோக்ராஜ் சிங் அளித்த பேட்டியில், ஓய்வு முடிவை அம்பதி ராயுடு தூக்கியெறிய வேண்டும், டோனி போன்ற அசிங்கம் பிடித்த நபர்களே அணியில் இருக்கும் போது, நீ எதற்காக ஓய்வு பெற்றாய்.

மீண்டும் இந்திய அணிக்காக நீ விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.

ராயுடுவுக்கு ஆதரவாக பேசுகிறேன் என பெயரில் டோனியை யோக்ராஜ் சீண்டியிருப்பது ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்