ஜோஃப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து அணியின் ஸ்டாராக மாற்றிய மாற்றான் தந்தை

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கிண்ணம் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரை நேரில் காண்பதற்காக அவருடைய மாற்றான் தந்தை இங்கிலாந்து வந்துள்ளார்.

இன்று நடைபெற உள்ள உலகக்கிண்ணம் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்குநேர் மோத உள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் நட்சத்திர பந்துவீச்சாளராக வலம்வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவதை நேரில் பார்ப்பதற்காக அவருடைய தந்தை இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ளார்.

சிறுவயதிலே தந்தையை இழந்த ஜோஃப்ரா ஆர்ச்சரை, அவருடைய அம்மாவின் காதலரான பேட்ரிக் வெய்தே தான் டென்னிஸ் பந்தில் பயிற்சி கொடுத்து கிரிக்கெட் விளையாட கற்றுக்கொடுத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அண்டர் 19 போட்டியில் விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர், 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணம் தொடருக்கு தேர்வாகவில்லை.

இதனையடுத்து இங்கிலாந்திற்கு வருகை தந்த அவர், அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன்மூலம் இங்கிலாந்து அணியின் உலகக்கிண்ணம் தொடருக்கு தேர்வான அவர், இங்கிலாந்து அணியின் சார்பில் உலகக்கிண்ணம் போட்டியில் 16 விக்கெட்டுகளை எடுத்து சர் இயன் போத்தம் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒரு முறை மட்டுமே ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவதை பார்த்திருக்கும் பேட்ரிக் வெய்தே, தற்போது இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers