தன்னை போல் பந்து வீசி வைரலான மூதாட்டிக்கு ஷாக் கொடுத்த பும்ரா: என்ன செய்தார் தெரியுமா?

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறினாலும், பல வீரர்கள் அவர்களின் தனித்திறமையின் மூலம் சிறந்து விளங்கினர்.

அவர்களில் ஒருவர் தான் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா, தனது சிறப்பான பந்து வீச்ச மூலம் இந்திய அணிக்காக 18 விக்கெட்டுகளை கைப்பற்றி, கடைசி ஓவர்களில் அசைக்க முடியாத மன்னனாக திகழ்ந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 13ம் திகதி சாந்தா சக்குபாய் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மூதாட்டி ஒருவர், பும்ரா பாணியில் பந்து வீசும் காட்சியை பதிவிட்டார். மேலும், உலகக் கோப்பையில் பும்ராவின் பந்து வீச்சால் ஈர்க்கப்பட்ட தனது தாய், பும்ரா போல் பந்து வீச முடிவு செய்ததாக பதிவிட்டார்.

குறித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாக, பும்ராவின் கவனத்திற்கும் இது சென்றுள்ளது. மூதாட்டியின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பும்ரா, வீடியோ தனது நாளை சிறப்பித்ததாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

பும்ராவின் செயலால் திகைத்து போன சாந்தா சக்குபாய், இதை கண்டு எனது தாய் மிகவும் மகிழ்ச்சி அடைவார். நன்றி சாம்பியன் என பதிலளித்துள்ளார். மூதாட்டியின் வீடியோவை பகிர்ந்த பும்ராவை பலர் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்