இலங்கை நடுவர் செய்த பெரும் தவறால் கை மாறிய உலகக்கோப்பை.. வெறுப்பான ரசிகர்கள் செய்த செயல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை இறுதி போட்டியில் களநடுவர்களாக செயல்பட்ட குமார் தர்மசேனா மற்றும் மராஸ் இரஸ்மஸ் ஆகியோரின் செயல்பாடு மிக மோசமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்துள்ளார்கள்.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணி அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையிலேயே இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வினோத விதியை ரசிகர்கள் மட்டுமின்றி முன்னணி கிரிக்கெட் வீரர்களும் விமர்சித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, அரையுறுதி மற்றும் இறுதி போட்டியில் களநடுவர்களின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது.

சில முக்கிய தருணங்களில் அவர்கள் தவறான முடிவுகளை எடுத்தது போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது.

அதிலும் குமார் தர்மசேனா, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஓவரின் கடைசி 3 பந்தில் இங்கிலாந்துக்கு 9 ஓட்டங்கள் தேவைபட்ட நிலையில், களதடுப்பில் ஈடுபட்ட நியூசிலாந்து வீரர் கப்தில், வீசிய பந்து, 2வது ஓட்டம் எடுக்க ஓடிய பென் ஸ்டோக்ஸ் துடுப்பில் பட்டு பவுண்டரிக்கு சென்றதால், இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கினார்.

ஆனால் இங்கு 5 ரன்கள் தான் வழக்கியிருக்க வேண்டும், இப்படி செய்திருந்தால் இங்கிலாந்து 1 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கும்.

இதையடுத்து குமார் தர்மசேனா மற்றும் மராஸ் இரஸ்மஸ் ஆகியோரை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

நீச்சி என்பவர் தனது டுவிட்டர் பதிவில், நாய் புகைப்படத்தை வெளியிட்டு இந்த நாய் ஆயிரம் மடங்கு தர்மசேனா மற்றும் இரஸ்மஸை விட சிறப்பான நடுவராக இருந்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.

அதே போல விநாயக் என்பவர் இரண்டு நடுவர்களும் எத்தனை முறை தவறான தீர்ப்பை கொடுத்துள்ளனர் என்பதை சுட்டி காட்டியுள்ளார்.

இதே போல பலரும் இரண்டு நடுவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers