உலகக்கோப்பை வென்ற மிதப்பில் இந்திய வீரரை வம்புக்கிழுத்த இங்கிலாந்து பிரபலம்.. என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் அந்நாட்டு பிரபலமான பியர்ஸ் மோர்கன் சேவாக்கின் பழைய ட்வீட்டை தேடி எடுத்து, பதிலளித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில் போட்ட பதிவு பெரும் விவாத பொருளானது.

அந்த பதிவில், 1.2 பில்லியன் மக்கள்தொகை உடைய இந்திய நாடு தோற்று போன இரண்டு மெடல்களைக் கொண்டாடுகிறது.

இது எவ்வளவு அவமானகரமானது? என 2016ம் ஆண்டின் செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதற்கு அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சேவாக் பதில் அளித்திருந்தார்.

அதில், நாங்கள் ஒவ்வொரு சின்ன, சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடுபவர்கள். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லாமல் இன்னும் விளையாடிக் கொண்டு மட்டுமே இருப்பது அவமானம் இல்லையா? என்றார்.

இந்நிலையில் 2019 உலக கோப்பையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து சேவாக்கின் இந்த பழைய ட்வீட்டை தேடி கண்டு பிடித்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் இங்கிலாந்தின் டிவி பிரபலம் மோர்கன்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது, ஹாய் நண்பா என்று தமது டுவீட்டை தொடங்கி இருக்கிறார். அதற்கு இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து பெற்றது ஒரு வெற்றியே அல்ல என்று கிண்டல் செய்து மோர்கனை டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...