இலங்கையிலிருந்து வெளியேறும் மலிங்கா? ஓய்வுக்கு பின் எந்த நாட்டில் வசிக்கவுள்ளார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா ஓய்வுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் நிரந்திரமாக குடியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அவுஸ்திரேலியாவின் நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிகிறது.

வங்கதேச கிரிக்கெட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதாவது, மலிங்கா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது குடும்பத்துடன் அங்கு குடியேறவுள்ளார் என அவரிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர் என இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மலிங்கா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

வரும் 26ஆம் திகதி தொடங்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணிக்கு மலிங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers