ஒருநாள் கிரிக்கெட் தொடர்! இலங்கைக்கு வந்தடைந்த வங்கதேச கிரிக்கெட் அணி.. வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி இலங்கைக்கு வந்தடைந்தது.

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி இன்று நாட்டை வந்தடைந்ததுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற பின்பு முதல் தடவையாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை வந்த அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி கருதப்படுகின்றது.

இந்த தொடருக்கான இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்